திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பு: தடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றிரவு ஆரம்பமானது.

கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வர ஆலய நிலம் அரசால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.