முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஓட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியளார் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட சென்னை பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி என்ஜினீயர் ராஜ்குமார் , சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் இது போல் முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் எச்சரிக்கையும் மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சுவரொட்டிகளை ஒட்டியதால் , இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் என்பவரும் புகார் அளித்தனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், சுவரொட்டி ஒட்டிய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்த ஆயிரக்காணக்கான சுவரொட்டிகள் மற்றும் இதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன்கள் உள்ளிட்டவையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலிப்ராஜுக்கு சுவரொட்டிகளை சத்தியநாதன் என்பவர் கொடுத்தது தெரியவந்தது. மேலும் சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் 5 ஆயிரம் சுவரொட்டிகள் அச்சடித்து கொரியர் மூலம் சென்னைக்கு கொண்டு வந்த ஒட்டியது தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் (41) என்பவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் பிலிப்ராஜ் சத்தியநாதன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமாரையும் நேற்று கைது செய்தனர். மேலும் கைதான கிருஷ்ணகுமார் அடையாறில் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.