‘கருணை அடிப்படையிலான வேலை உரிமை அல்ல’: உச்ச நீதிமன்றம்

கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திடீரென்று ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப்பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

எப்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின்போது மரணமடைந்தார். ஊழியரின் மனைவி, வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை.

எப்சிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின் கருணை அடிப்படையில் வேலை கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.