கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்.

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் வருடாந்தம் அங்கத்துவ கழகங்களிற்கிடையே நடாத்தும் வருடாந்தம் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடரின் பி பிரிவு அணி களுக்கான கரப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் நேற்றைய தினம் அச்சுவேலி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் 8.மணிக்கு இடம் பெற்ற ஆட்டத்தில் அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக் கழக அணி மோதியது.இதில் அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக் கழக அணி 26 : 24, 23:25, 25:20 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.9. மணிக்கு இடம் பெற்ற ஆட்டத்தில்அச்சுவேலி யூத் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கச்சாய் வொலி கிங்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.இதில் கச்சாய் வொலி கிங்ஸ் விளையாட்டுக் கழக அணி 25:11,25:19 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.