சு.க. உறுப்பினர்கள் கட்சித் தலைமையகத்துக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைமையகத்துக்கு வருமாறு கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தைப் புறக்கணிக்க சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு குழு தீர்மானித்துள்ளது என்று அந்தக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் அரசமைப்பு திருத்தப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.

அதேநேரம், அண்மையில் கட்சியின் தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெற்றிடங்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கப்படாத பின்னணியிலேயே குறித்த மாவட்ட மற்றும் ஆசன அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.