இங்கிலாந்தில் கடந்த 42 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உச்சம்.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 42 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உணவுப்பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பால், பிரட், வாழைப்பழம் போன்ற அத்தியாவசிய பொருட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஏற்கெனவே அன்றாட செலவு நெருக்கடியை சந்தித்துவரும் மக்களுக்கு இது அதிகமான அழுத்தத்தை கொடுத்துள்ளது.

ஒருவருடத்திற்கு இங்கிலாந்தில் வாழும் மக்களுக்கு ஒரு வருடத்தில் 4 லட்சம் ரூபாயை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து நிதி மந்திரியிடம் கேள்வியெழுப்பியபோது, இந்த விலைவாசி உயர்வினால் அதிகமாக அவதிப்படுவோர்க்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும் என்றும், அனைவருக்கும் பொதுவான பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொடுப்பதே எங்களது தொலைநோக்கு பார்வையாக இருக்கும் என்று பதிலளித்திருக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.