அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை.

ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின.

அயர்லாந்து கேப்டன் பால்பிரீன் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது.

பால்பிரீன் ஒரு ரன்னில் லகிரு குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பால் ஸ்டிர்லிங்குடன் டக்கர் ஜோடி சேர்ந்தார். இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அயர்லாந்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்னே எடுக்க முடிந்தது.

டெக்டர் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் தீக்சனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி பின்னர் விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குசால்மென்டிஸ் 43 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), தனஞ்செய டி.செல்வா, அசலங்கா தலா 31 ரன்னும் எடுத்தனர்.

இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.