மின் நிலையங்களை குறிவைத்து தாக்கும் ரஷியா.

ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் கீவ், கெர்சன், செர்காசி பகுதிகள் இருளில் மூழ்கின. ரஷியாவின் கருங்கடல் பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. அதற்கு பதிலடியாக ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா நடத்திய தொடர் தாக்குதல்களால் மின் நிலையங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.இதனையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் 80 சதவீத பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அங்கு குடிநீர் குழாய்களும் சேதமடைந்துள்ளதால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.நிலைமை மோசமாக இருப்பதால், தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அந்நகர மேயர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மின் நிலையங்களை ரஷியா குறிவைத்து தாக்குவதால், 12 நாடுகளில் இருந்து ஜெனரேட்டர்கள் உள்பட 1000 மின்சாதனங்களை கொள்முதல் செய்ய உக்ரைன் ஒப்பந்தம் செய்துள்ளது. உக்ரைனின் அனல்மின் நிலையங்கள், துணைமின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள், குடிநீர் குழாய்கள் குறிவைத்து தாக்கப்படுவதால் உக்ரைனில் மின்தடை, குடிநீர் தடுப்பாடு, இணையதள சேவைகள் தடைபட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.