சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாஸ்போர்ட் மோசடி அம்பலமானது

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஒரு பிரிட்டிஷ் குடிமகள்! இலங்கையில் விசா 2014ல் முடிந்தது!
போலி பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும், போலி அடையாள அட்டையையும் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார்!
டயனா சமன்மலி-டயானா நட்டாஷா கேகனதுர-டயனா கமகே என
3 பெயர்கள்!
குடிவரவு – குடியகல்வு திணைக்களம் இத் தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது!

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது இலங்கை வீசா 2014ஆம் ஆண்டுடன் காலாவதியானது எனவும்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் களஞ்சிய தரவுகளின் அடிப்படையில் திணைக்களம் ,  நீதிமன்றில் அறிவித்துள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தின் ஆவணங்களின்படி, ‘நயனா சமன்மலி’ என்ற டயானா நடாஷா கெகனதுர என்றழைக்கப்படும் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலங்கை கடவுச்சீட்டொன்றை பெற்றுள்ளார்.

அவர் “இரட்டைக் குடியுரிமை” உடையவர் அல்ல என்றும் பிரித்தானிய குடியுரிமையுடன் சட்டவிரோதமாக இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் குடிவரவு அதிகாரிகள் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த வழக்கை தொடர்வதற்கு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, உண்மைகளை ஆராய்ந்து, இந்த நீதிமன்ற விவகாரத்தை விரைவில் முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.

டயனா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, நீதிமன்றில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தத் தயாராக இருந்த போது , அவருக்கு குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து அவசர இடமாற்றம் பெற்றார் .

இதன் காரணமாக, இந்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு முன் வெளிப்படுத்தப்படவில்லை, பின்னர் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு இலங்கையை விட்டு வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.