நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த கப்பலில் சூட்சுமமாகப் போதைப்பொருள் கடத்தி வந்த பயணி கைது!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்கப் பரிசோதனையின்போது அகப்பட்டார்.
நாகபட்டினத்தில் இருந்து வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 4 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை சூட்சுமமாக உடமையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
சோதனையில் சுங்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.
போதைப்பொருளைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சுங்கத் திணைக்களத்தினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவரைக் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.