இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு: ஜேஎன்.1 வைரஸ் பரவல், 257 பேருக்கு தொற்று!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவிலும் கரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் 257 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளம்(69), மஹாராஷ்டிரத்திலும்(44) கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் ஓமிக்ரான் BA.2.86-இன் புதிய வகையான ஜேஎன். 1(JN.1) வைரஸ்தான் தற்போது அதிகம் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல், சோர்வு, தலைவலி, சுவைத் தன்மையை இழத்தல், தசை வலி, கண் சிவத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த ஜேஎன். 1 வகை வைரஸில் LF.7, NB.1.8 உள்பட 30 வகைகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.