வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயப் பிரதான வீதிக்குக் காப்பற் இடும் பணி ஆரம்பம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயப் பிரதான வீதிக்குக் காப்பற் இடும் பணி இன்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 24 மில்லியன் ரூபா செலவில் 1.75 கிலோ மீற்றர் காப்பற் வீதியும், மீதமாக உள்ள 4.35 கிலோமீற்றர் வீதிக்குக் கிரவலும் போடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருத்தனர்.







