சுற்றுலா பேரூந்து விபத்தில் சிக்கியது! மூவர் பலி, பலர் படுகாயம்!

நேற்றைய தினம் சம்பவித்த மற்றுமொரு கோர விபத்தில் பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை – துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அநுராதபுரம் நோக்கி சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக சுற்றுலா செல்லும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.