மன்னாரில் கோர விபத்து! 4 வயது சிறுவன் மரணம்!! – அவரின் தந்தை, தாய், சகோதரி படுகாயம்.

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினர் நால்வரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நானாட்டான் நோக்கிப் பயணித்திருந்தனர். அப்போது, எதிர்த் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது என்று முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்ததனர். அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்தார்.

ஏனைய மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார்.

பட்டா ரக வாகனத்தின் சாரதியை முருங்கன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
…………………..

Leave A Reply

Your email address will not be published.