இந்திய உப ஜனாதிபதியுடன் மலையகக் கட்சிகள் சந்திப்பு!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன், மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் மலையகக் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மலையக மக்களின் பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் டித்வா புயலுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதிக்கும், காலப்போக்கில் வழங்கப்பட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசுக்கு மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
