செங்கோட்டை கொடியேற்றமும்… கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகையும்!

புதுடெல்லி,

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் தலைப்பாகை கவனம் ஈர்த்துள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து பீரங்கிகளின் குண்டு முழக்கத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. இதன் பின்னர் இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவிச் சென்றன.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போதிருந்து ஒவ் வொரு ஆண்டும் அவர். சுதந்திர தின விழாவில் விதவிதமான தலைப்பாகையை அணிந்து வருகிறார். அவரது தலைப்பாகை சுதந்திர தின விழாவின் பேசுபொருளாக மாறிப்போனது.

அந்தவகையில், நேற்றைய சுதந்திர தின விழாவில், 13-வது ஆண்டாக பிரதமர் மோடியின் தலைப்பாகை கவனம் ஈர்த்தது. நேற்று அவர் பாரம்பரிய சிவப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மற் றும் குஜராத் கலாசாரங்களுக்கு பொதுவானதாக அது காணப்பட்டது. அத்துடன், வெள்ளை குர்தாவும், சாக்லேட் பிரவுன் நிற மேலங்கியும் அணிந்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.