இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே நேற்றுக் காலை சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இலங்கைப் படகு – இந்தியப் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோட்டம்.
இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்தியப் பொலிஸார் முற்பட்டனர்.
பொலிஸார் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது.
தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் காணப்பட்டனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு கடத்தல் நடவடிக்கைக் தொடர்பான படகாக இருக்கலாம் என இந்தியப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
