அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டு. பொலிஸாரால் கைது!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.