பொலிஸாரைக் கண்டதும் கழுத்தை அறுத்துத் தப்பிக்க முயன்ற இளைஞர் வைத்தியசாலையில்! – யாழில் பரபரப்பு.

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், மேற்படி இளைஞர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

இதன்போது பொலிஸாரைக் கண்ட அந்த இளைஞர், வீட்டின் ஜன்னலை உடைத்து அந்தக் கண்ணாடித் துண்டின் மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் உடனடியாக மீட்கப்பட்ட மேற்படி இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கழுத்தை அறுக்க முயன்றபோதும் அவருக்குப் பாரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படாத காரணத்தால், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.