இலங்கைக்குக்கு படையெடுக்கும் வெட்டுக் கிளிகள்

இந்தியாவில் நிகழ்ந்ததுபோல இலங்கையிலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்கான சில அவதானிப்புகளை விவசாய திணைக்களம் கண்டறிந்துள்ளது.

மஞ்சள் புள்ளிகளை கொண்ட வெட்டுக்கிளிகள் நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மாவனெல்ல பகுதியிலும் வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண விவசாய பணிப்பாளர் I.D. குணவர்தன குறிப்பிட்டார்.

குருநாகல் – மாவத்தகம பகுதியில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், பின்னர் மீரிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயிர்ச் செய்கைகளில் அல்லது விவசாய நிலங்களில் இதுதொடர்பில் வெட்டுக்கிளிகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அது தொடர்பில் அறியத் தருமாறும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

1920 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 077 3028 270 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும்.

Comments are closed.