கிராமத்திற்கு மூன்று மில்லியன் : 136 கிராம சேவகர்களுடன் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சந்திப்பு!

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலனியினால் 2022ம் ஆண்டு பாதீட்டை(வரவுசெலவு திட்டத்தை) அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ளவதற்காக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளை முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை கிராமத்துடனான கலந்துரையாடல் ஊடாக பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமங்களிலிலுள்ள மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை இத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது நேற்று(27) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் அந்தந்த பிரதேச செயலகங்ஙளில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா பிரதேச செயலகங்களின் மாநாட்டு மண்டபத்தில் குறித்த பிரதேச செயலாளர் ஊடாக கிராம சேவகர்கள் மற்றும் கிராமமட்ட உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்…

அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை இனம் காண்பதற்காக இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கிராமத்து கருத்துருவை மாத்திரம் உள்ளடக்கப்படும் குறித்த அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுப் பட்டியலை தயாரிக்கும் போது கீழ்வரும் விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

1. வாழ்வாதார அபிவிருத்தி 40%
2. பொதுஉட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி 40%
3. சூழல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி 10%
4. சமூக நலனோம்பு மற்றும் சமூக அபிவிருத்தி 10%

இதில் முதற்கட்ட தேவை, இரண்டாம் கட்ட தேவை என்றவாறாக திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கப்பட்டு அவை அடுத்த ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய அறிக்கை ஒன்றினை கிராமங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் அந்தந்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.