ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன். 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு (800) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஷேன் வார்ன் (708) ஆவார்.

ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன், அவர் ஆடிய காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் அலறவிட்டவர் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷேன் வார்ன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணனையாளராக இருந்துவந்த நிலையில், தாய்லாந்தில் இன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.