உக்ரேனிய மருத்துவமனையை ரஷ்யா தாக்கியது: குழந்தைகள் உட்பட பெண்களுக்கு கடுமையான பாதிப்பு (VIDEO)

ஊக்ரேனிலுள்ள Mariupol நகரின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் மீது நடத்திய ரஷ்ய தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா நடத்தியுள்ள ரொக்கட் தாக்குதல் மருத்துவமனைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை கிடைக்கப்பெறும் தகவலின்படி மருத்துவமனை ஊழியர்கள் , தாய்மார்கள் உட்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். எவ்வாறாயினும் காயப்பட்டோர் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேன ஜனாதிபதி Volodymyr Zelensky அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரஷ்ய இராணுவத்தால் மருத்துவமனை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளார்.

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரேன் ஜனாதிபதி ட்விட்டர் செய்தியொன்றின் மூலம் உலகப் பிரஜைகளிடம் குற்றச் செயலுக்கு எதிராக தங்களது அதிகாரத்தை செலுத்துமாறு வேண்டியுள்ளார்.

பிந்தி கிடைத்த தகவல்கள் இணைப்பு:

உக்ரேனின் மரியுபோல் (Mariupol) நகரில் ரஷ்யா மருத்துவமனை ஒன்றின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு உக்ரேன் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தற்காலிகச் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கிய காலத்தில், மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது அட்டூழியமான செயல் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) சாடினார்.

இடிபாடுகளில் பிள்ளைகள் சிக்கியிருப்பதாக அவர் கூறினார்.

தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

மரியுபோல் நகரை ரஷ்யப் படையினர் பல நாள்களாகச் சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்கில் பலமுறை அறிவிக்கப்பட்ட தற்காலிகச் சண்டை நிறுத்தம் தோல்வியில் முடிந்தது.

400,000க்கும் அதிகமானோர் நகரில் தற்போது சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய உக்ரேன் பூசலில் பொதுமக்களில் இதுவரை 500-க்கும் அதிகமானோர் மாண்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

ஆனால் உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அது குறிப்பிட்டது.

Leave A Reply

Your email address will not be published.