சர்வகட்சி அரசுக்குச் சாத்தியம் இல்லை! – விமல் தகவல்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசு உதயமாவதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது.”
இவ்வாறு தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
சுயாதீன அணிகளுக்கிடையிலான விசேட கூட்டம் கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை கருதியாவது, ஒன்றிணைந்து பயணிக்கும் மனநிலை நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இல்லை. ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே, சர்வகட்சி அரசு சாத்தியப்படாது. தற்போதைய அரசு, தொடர்ந்து பயணிக்கவே முயற்சிக்கின்றது” – என்றார்.