ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு !

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

அண்ணாத்தே படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஜெயிலர் படத்தின் சென்னையில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது அதன் பிறகு கடலூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது . ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சண்டை இயக்குனராக பணியாற்றும் ஸ்டண்ட் சிவா ஜெயிலர் படத்தின் புதிய தகவலை சமீபத்தில் தான் வழங்கிய பேட்டியில் தந்துள்ளார் .ஜெயிலர் படத்தில் 7 சண்டை காட்சிகள் உள்ளன என்றும் 7 சண்டைகளும் செம மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

விறுவிறுப்பாக நடந்து வந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . இதனால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதம் ஆகி வருகிறது .

Leave A Reply

Your email address will not be published.