பிக்பாஸ் வீட்டுல 2 சிங்கம் இருக்கு.!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய நிவாஷினி தற்போது முதல் முறையாக லைவ்வில் பேசியுள்ளார்.

அதில் அவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த மாடலான நிவாஷினிக்கு பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பி கிடைத்தது. ஆனால் இவர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

போட்டி ஆரம்பமானது முதல் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த நிவாஷினி சில நாட்களுக்குப் பின்னர் தெரியாமலேயே போனார். இவர் வீட்டில் தான் இருக்கிறாரா? இந்த போட்டியில் இவர் ஒரு போட்டியாளராக இருக்கிறாரா என்பதை தேட வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அசல் கோளாறுடன் ஏற்பட்ட நட்பு இவருக்கு பின்னாளில் வினையாக மாறியது.

அசல் கோளாறுடன் நெருக்கம் காட்டி வந்தார் நிவாஷினி. இந்த நெருக்கம் அவர்கள் இருவரையும் வைத்து மீம்ஸ் போட வழி வகுத்தது. கட்டிப்பிடிப்பது, அத்து மீறி தொடுவது என நிவாஷினி மற்றும் அசல் கோளாறு இடையே நடந்த நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.

இதனால் தான் என்னவோ அசல் கோளாறு இரண்டாவது வாரமே வெளியேற்றி விட்டார்கள். அதன் பின்னர் ஆறு வாரங்கள் கடந்து விட்ட நிலையில் நிவாஷினியின் குரல் வெளியில் தெரியவே இல்லை. முக்கியமாக கடந்த வாரம் நடந்த அரசவைப் போட்டியில் அவர் இருந்ததாகவே தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் நிவாஷினியும் போட்டியில் இருந்து வெளியேறினார்.

வெளியேறிய பிறகு அவர் முதல் முறையாக லைவ்வில் வந்துள்ளார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அசீம் மற்றும் விக்ரமன் இரண்டு சிங்கம் போன்றவர்கள்.

ஆனால் விக்ரமன் ஒரு அமைதியான தைரியமான சிங்கம். அவரும் ஷிவினும் இறுதி போட்டியாளர்களாக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நிவாஷினி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.