மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 5 இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 5 இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை மாலை 6.05 மணிக்குப் பொதுச்சுடர், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், தாண்டியடி துயிலும் இல்லம், தரவை துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் என நான்கு துயிலும் இல்லங்கள் உள்ளன.

இந்த நான்கு துயிலும் இல்லங்களில் தாண்டியடி துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் உள்ளதால் தாண்டியடி சந்தியில் உள்ள பிரத்தியேக இடத்திலும், ஏனைய மூன்று துயிலும் இல்லங்களில் அதே துயிலும் இல்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளன.

விரும்பிய நான்கு இடங்களில் அனைவரும் அவரவர் வசதிக்கு அமைவாக கலந்துகொண்டு உயிர்நீத்த எமது உறவுகளுக்கு மனதார தீபங்களை ஏற்றி அஞ்சலி வணக்கம் செய்யலாம்.

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் அம்பாறை மாவட்ட எமது மக்கள் கலந்துகொள்ளலாம்.

நாளை கட்டாயம் விரும்பிய அனைவரும் மாலை 4 மணிக்கு முன்னதாக குறிப்பிட்ட துயிலும் இல்லங்களுக்கு சமூகம் தருவது நல்லது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.