இலங்கைக்குக் கடத்த முயன்ற 40 மஞ்சள் மூடைகள் தமிழகத்தில் சிக்கின!

இலங்கைக்குக் கடத்த இருந்த 1500 கிலோகிராம் நிறையுடைய 40 மஞ்சள் மூடைகளைத் தமிழகப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்குச் சட்டவிரோதமாக படகு மூலம் கடத்த இருந்த சுமார் 1500 கிலோகிராம் நிறையுடைய 40 மஞ்சள் மூடைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய நாட்டுப் படகு, மஞ்சளைக் கடல் கரைக்கு ஏற்றி வந்த வாகனம் உள்ளிட்டவைகள் தனிப் பிரிவுப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.