ஓமானில் துன்புறும் எமது பெண்களைக் காப்பாற்றுங்கள்! – வவுனியாவில் போராட்டம்.

“ஓமானில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட எமது பெண்களைப் காப்பாற்றுங்கள்” எனக் கோரி வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமகி வனிதா பலவேகய அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், “இலங்கைப் பெண்கள் பாலியல் அடிமைகளா?”, “அனைத்தையும் விற்று ஏப்பமிட்டு இப்போது எமது பெண்களின் மானத்தையும் விற்கும் மானம் கெட்ட அரசு”, “ஓமானில் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள எமது பெண்களைக் காப்பாற்று” போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இலுப்பையடிச் சந்தியிலிருந்து நடைபயணமாகச் சென்ற போராட்டகாரர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வவுனியா காரியாலயத்தை முற்றுகையிட்டதுடன் பணியகத்தின் பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.