செய்யாத கொலைக்கு சிறை.. 7 ஆண்டுகளுக்குப் பின் தெரிந்த உண்மை.. உயிரோடு வந்த பெண்ணால் ஷாக்!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆண் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன் ஆக்ராவில் உள்ள ஒரு அறியப்படாத உடலை அவர் தனது மகள் என்று அடையாளப்படுத்திய சிறுமியின் தந்தை கொடுத்த வழக்கின் பேரில் ஒரு சிறுமியைக் கடத்தி கொலை செய்யப்பதாக குற்றம் சாட்டி விஷ்ணு என்பருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது .

ஆனால், சில மாதங்களுக்கு முன் விஷ்ணுவின் தாயார் சுனிதா அலிகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) கலாநிதி நைதானியை சந்தித்து, ‘இறந்த’ பெண் உயிருடன் இருப்பது மட்டுமல்லாமல் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாகவும் தனக்கு தகவல் இருப்பதாக சுனிதா போலீஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

பின்னர், காவல்துறை அதிகாரி சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் தற்போது உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அந்த பெண் தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து அலிகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவளது அடையாளத்தைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டுள்ளது.சிறுமியின் தந்தையும் அந்த பெண்ணை தனது சொந்த மகள் என அடையாளம் காட்டியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக சொல்ல பட்ட பெண் உயிருடன் வந்தது அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிறுமியை கொன்றதாக பொய் குற்றம் சாட்டி தனது அப்பாவி மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக்கொடுத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விஷ்ணுவின் தாயார் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.