ஷாரோனை நான் கொலை செய்யவில்லை.. போலீசார் மிரட்டி அப்படி சொல்ல வைத்தனர்.. கிரீஷ்மா அந்தர் பல்டி

கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் என்பவரை கிரிஷ்மா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதியன்று தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோன் ராஜை கிரீஷ்மா அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார்.

இதனையடுத்து ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரின் மோசமான நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்தார்.

பின்னர் அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் கிரீஷ்மா காவல்துறையினரிடம் கூறினார். இதனையடுத்து ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டபோது, அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறியதை அடுத்து காவல்துறையினருக்கு கிரீஷ்மா மீது சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கிரீஷ்மாவிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை ஜூஸில் கலந்து கொடுத்து காதலனை ஷாரோன் ராஜை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்கள் ஜோடியாக சுற்றி திரிந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போழுது ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சுமருந்து கலந்து கொடுத்து கொலை செய்வதற்கு முன்னதாகவே நெய்யூர் கல்லூரியில் வைத்து ஜூஸில் காய்ச்சலுக்கான டோலோ மாத்திரைகளை அதிக அளவில் கலந்துகொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட் 2- ல் பதிவு செய்யப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் தான் ஷாரோனை கொலை செய்யவில்லை என்றும் போலீசார் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் போலீசார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர் என கூறி இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் குற்றத்தை மறுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கிரீஷ்மா எங்களுக்கு அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ எடுத்துள்ளோம். 70 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.