20 வது அரசியலமைப்பு திருத்த வரைபு இன்றைய தினம் அமைச்சரவையில்

20 வது அரசியலமைப்பு திருத்த வரைபு இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

20 வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர அது தொடர்பிலான விபரங்கள் குறித்து தெரிவிக்க முடியுமெனவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

19 வது திருத்தத்திலுள்ள பெரும்பாலான விடயங்கள் நீக்கப்பட்டு 20 வது திருத்தம் உருவாக்கப்பட உள்ள அதேவேளை முழுமையான அரசியல் அமைப்பு திருத்தம் அரசாங்கத்தின் முதல் கட்ட செயல்பாடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.