ரூ. 92,570 கோடி அபேஸ்.. கடன் வாங்கி ஏமாற்றிய 50 பேர்.. பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் உள்ள வங்கி கடன் வாங்கி ஏமாற்றியவர்களின் 50 பேரது பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அவர்கள் பெற்ற மொத்தக் கடன் ரூ.92,570 கோடி எனவும் தெரிவித்துள்ளது.

நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மெஹூல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.7,848 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஈரா இன்ப்ரா நிறுவனம் ரூ.5,879 கோடியும், ரெய்கோ அக்ரோ ரூ.4,803 கோடியும் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். கான்காஸ்ட் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடி கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக அமைச்சர் பகவத் கராத் தெரிவித்துள்ளார்.

மேலும் “அமலாக்கத்துறை அளித்த தகவலின் படி, 2014ஆம் ஆண்டில் இருந்து விஜய் மல்லயா, நீரவ் மோடி, நிதன் ஜயந்திலால், சேடன் குமார், ஜயந்திலால் சந்திசாரா, திப்தி சேடன் சந்திசாரா, ஹித்தேஷ் குமார் ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிவித்தார்.

இதேப்போல் ஏபிஜி ஷிப்யார்டு, புரோஸ்ட் இண்டர்நேஷனல், வின்சம் டைமண்ட்ஸ் மற்றும் ஜிவல்லரி நிறுவனங்களும் கடன் பெற்று விட்டு வேண்டும் என்றே திரும்ப செலுத்த வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

ரோடோமேக் குளோபல், கோஸ்டல் புராஜக்ட்ஸ், ஜூம் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.