Elimination ஆன தனலட்சுமிக்கு அசீம் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி வெளியேறிய நிலையில் பத்து போட்டியாளர்கள் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாடி வந்தனர்.

இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீடு ஆரம்ப பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும், அதன் பின்னர் கல்லூரி ஆகவும் மாறி இருந்தது. இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்து இருந்த விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. பொதுவாக ஒரு டாஸ்க் என வந்து விட்டால் பிக் பாஸில் ஏராளமான சண்டைகள் நடைபெறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் கடந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களும் வலம் வந்ததுடன் மட்டும் இல்லாமல், மிகவும் கலகலப்பாகவும் தங்களின் பணிகளை செய்தனர். இதனால் டாஸ்க் மிகவும் உற்சாகமா தான் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் டாஸ்க் முடிந்த பின்னர் ரேங்கிங் டாஸ்க் வந்த சமயத்தில், தான் சிறப்பாக விளையாடியதாக கூறி அசிம் முதல் நம்பரில் நின்றார். இதன்பினர் இரண்டாவது இடத்தில் அமுதவாணனும் மூன்றாவது இடத்தில் தனலட்சுமியும் நின்றிருந்தனர்.

அசிம் முதலிடத்தில் நின்றது குறித்து ஷிவின், விக்ரமன் உள்ளிட்ட பலரும் பல கேள்விகளை எழுப்ப, இதற்கு அசிம் கூறியிருந்த பதில்கள் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. என்னடா இந்த வாரம் சண்டை வரவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் ரேங்கிங் டாஸ்கில் நடந்த விஷயங்கள் பெரிய அளவில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனை தொடர்ந்து வார இறுதியில் தோன்றிய கமலஹாசன் அசிமின் செயல்பாடுகள் குறித்து நிறைய கருத்துக்களை பேசி இருந்தார். இதைத் தவிர ரேங்கிங் டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் செய்தது பற்றியும் பல கருத்துக்களையும் கமல்ஹாசன் முன்வைத்ததுடன், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் எலிமினேஷனில் இருந்து Save ஆனதாகவும் கமல் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனலட்சுமி, அசிம் மற்றும் மைனா ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் காத்திருக்க, இதில் தனலட்சுமி எலிமினேட் ஆனதாக கமல் அறிவித்தார். அப்போது சக போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்ற தனலட்சுமியிடம், “இனி நீ பிக்பாஸ் தனலட்சுமி தான். யாரேனும் பிக்பாஸ் வீட்டில் இருந்து நீ என்ன எடுத்துகிட்டு வந்த?” என கேட்டால்,  “பிக்பாஸ் எனும் டைட்டிலை எடுத்துக்கொண்டு வந்ததாக சொல்லலாம்” என தன் ஸ்டைலில் மோட்டிவேட் செய்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.