கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் விழா.

கிளிநொச்சி மாவட்டச்செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.

நலன்புரி சங்கத்தின் சார்பாக சங்கத்தின் தலைவர் திருமதி.லிங்கராஜா கலாஜினி அவர்கள் தைப்பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துகொண்டார்.

தொடர்ந்து உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் தைப்பொங்கல் நிகழ்வின் சிறப்பினை எடுத்துக்கூறியதோடு அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

உழவர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத்திருநாள் எனப் பலவாறு கூறப்படும் பொங்கல் பண்டிகை ஒரு தனிப் பெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.