“பனைத்திருவிழா” 2023

எதிர்வரும் 21.01.2023 நிகழவுள்ள பனைத்திருவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் விருத்தி போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்போட்டிகள் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடாத்தப்படுகின்றன.

தரம் 1 – 5 : சித்திரப்போட்டி

தரம் 6 – 9 : கட்டுரைப்போட்டி

தரம் 10 – 13 : ஆய்வுக்கட்டுரைப் போட்டி

மேற்படி போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் அவர்களது ஆக்கங்களை பின்வரும் வழி வகைகளின் ஊடாக அனுப்பி வைக்க முடியும். (மூன்றில் ஒரு வகையில் அனுப்பி வைக்க முடியும்)

Whatsapp- 0771081409

மின்னஞ்சல் – panaithiruvizha@gmail.com

தபால் – 209, எழுதிரள், பலாலி வீதி, கோண்டாவில், யாழ்ப்பாணம்

அனுப்பப்படும் ஆக்கங்களுடன் மாணவரின் முழுப்பெயர், தரம், பாடசாலை பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும்.

ஆக்கங்கள் அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் திகதி – 2023.01.19

ஆக்கங்கள் மாணவர்களுடைய ஆக்கங்களாக இருப்பதுடன், தெரிவு செய்யப்படும் ஆக்கங்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு : 0779558919 | 0776785023

மாணவர்கள் அனைவரும் ,எமது கலாச்சார பொருண்மியமாக திகழும் “பனை” தொடர்பான தமது சிந்தனைகளை ஆக்கங்களாக உருவம் கொடுத்து போட்டிகளில் பங்குபற்றவும்.

Leave A Reply

Your email address will not be published.