யாழில் கோர விபத்து! இளைஞர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் சைக்கிளும் மோதியே விபத்து ஏற்பட்டது.

மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.