‘மொட்டு’க் கட்சிக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! – மக்களிடம் சந்திரிகா வலியுறுத்து.

எதிர்வருகின்ற தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதில் ‘மொட்டு’க் கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ‘மொட்டு’க் கட்சி எம்.பிக்களான அனுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகிய இருவரும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர். இதன்போதே அவர் இதனைக் கூறினார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திரிகா கடுமையாக விமர்சித்தார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.