உத்தரப் பிரதேசத்தில் பேருந்து பாலத்தின் மீது மோதியதில் 40 பயணிகள் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து பாலத்தின் மீது மோதியதில் 40 பயணிகள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு கோரக்பூரில் இருந்து மகராஜ்கஞ்ச் என்ற இடத்திற்கு 51 பேருடன் சென்ற பேருந்து, அங்குள்ள பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 24 பயணிகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மஹராஜ்கஞ்ச் சதர் கோட்வாலி காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரவி ராய் தெரிவித்தார்.

அதில், 16 பயணிகள் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டது.

மஹ்ராஜ்கஞ்ச் மாவட்ட நீதிபதி சதேந்திர குமார் மற்றும் எஸ்பி கௌஸ்துப் ஆகியோர் இன்று காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.