முதல் போட்டி , முதல் வெற்றி..! ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த ரொனால்டோ…

உலகம் முழுவதும் எந்த விளையாட்டுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ கிரிக்கெட் மற்றும் கல் பந்து விளையாட்டுக்கு கோடானகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக இந்த கால்பந்து விளையாட்டை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வெறித்தனமாக ரசித்து பார்க்கிறார்கள் .

கால்பந்து விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஆகிய நால்வரும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வைத்து நடைபெற்ற கால்பந்து போட்டியில் உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் விளையாடியதை கண்டு மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போனது.

இந்நிலையில் அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததற்கு ரொனால்டோ தனது ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை கூறியுள்ளார்.

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அல் நஸர் மற்றும் அல்-எட்டிஃபாக் அணிகள் மோதின.

போர்ச்சுக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் அணியில் விளையாடும் முதல் போட்டி என்பதால் இந்த போட்டியின் மீது எக்க்கசக்க எதிர்பார்ப்புகள் நிலவியது . எப்போதும் போல் அபாரமாக விளையாடிய ரொனால்டோ ரசிகர்களுக்கு நல்ல விருந்தை கொடுத்தார் அனைவரும் நினைத்தது போல் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோல் அடிக்கவில்லை என்றாலும் ரொனால்டோ தனது யுக்திகளை பயன்படுத்தி எதிரணிக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரொனால்டோ பதிவிட்ட ட்வீட்டில், ‘முதல் போட்டி, முதல் வெற்றி – சிறப்பாக முடித்தீர்கள் வீரர்களே. நம்ப முடியாத அளவு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் இருந்து எத்தனையோ துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வந்த ரொனால்டோ இன்று உலகின் தலை சிறந்த கால்பந்து வீரராக வலம் வருகிறார் . மேலும் அவரின் குழந்தைகளும் தந்தையை மிஞ்சும் அளவிற்கு அபார திறமைகளுடன் கால்பந்தில் சாதிக்க காத்திருக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.