தங்கை ஷிவினுக்கு ரட்சிதா கொடுத்த வரவேற்பு.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஷிவினுக்கு மக்கள் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.

காரில் ஏற்றி அவரை நிற்க வைத்து, செண்டை மேளங்கள் முழங்க மாலை மரியாதை உடன் ஊர்வலமாக வந்த ஷிவினை மக்கள் வரவேற்று இருக்கும் வீடியோவை அவரே தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் இந்த முறை சில வித்தியாசமான நடைமுறைகளை புகுத்தி இருந்தது.

அதாவது பொதுமக்களில் இருந்து ஒருவரையும், திருநங்கைகளிலிருந்து ஒருவரையும், அரசியல்வாதி ஒருவரையும் இந்த சீசனில் களம் இறக்கி இருந்தது பிக்பாஸ். பொதுமக்களில் ஒருவராக தனலட்சுமியும், திருநங்கைகளில் ஒருவராக ஷிவின் கணேசனும், அரசியல்வாதியில் இருந்து ஒருவராக விக்ரமனும் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இவர்கள் மூன்று பேருமே நல்ல தேர்வாகவே இருந்தனர். பிக்பாஸ் இவர்கள் மூவரையும் உள்ளே அனுப்பி இருந்ததற்கு தங்களது செயல்கள் மூலம் நியாயப்படுத்தி இருந்தனர்.

ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாசகத்திற்கு ஏற்ப தனலட்சுமி முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு இருந்தார். ஆறு வருடங்களாக பிக்பாஸில் கலந்து கொள்ளும் ஆர்வத்தின் காரணமாக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டார் தனலட்சுமி. இவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தனது கடின உழைப்பால் உள்ளே வந்த அவர் பாதியிலேயே வெளியேறியது ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஷிவின் மற்றும் விக்ரமன் இருவரும் இறுதி போட்டியாளர்களாக வந்திருந்தனர். ஆனால் இவர்கள் இருவராலுமே வெற்றி பெற முடியவில்லை.

இது பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு திருநங்கையாக இருந்து சிங்கப்பூரில் வேலை பார்த்து பின்னர் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி தனது கடின உழைப்பால் இவ்வளவு தூரம் வந்திருக்கும் ஷிவினுக்கு டைட்டில் கொடுக்காதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

பொதுமக்களிடம் கருத்து கேட்ட பொழுது கூட விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டும். வீட்டில் அமைதியாகவும் நியாயத்திற்கு குரல் கொடுத்த இருவரில் ஒருவர் வராமல் அசீம் வெற்றி பெற்றதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் அசீம், விக்ரமன் ஆகியோர் தங்களது முதல் பதிவுகளை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அசீம் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். விக்ரமன் ஒரு வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஷிவின் தற்போது ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தனது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறி நின்று கொண்டு மாலை மரியாதை உடன், செண்டை மேளங்கள் முழங்க வலம் வருகிறார். அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கைகுலுக்கி வரவேற்று இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.