A/L பரீட்சை முடிவடைந்த பின் 6 மணிநேரம் மின் வெட்டு?

நுரைச்சோலை மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு 55 பில்லியன் ரூபா தேவை என்றும், அதைத் திரட்ட முடியாது போனால் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் 6 மணி நேரம் மின் வெட்டப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நிதியை விரைவில் திரட்டுவதற்கான நடவடிக்கையில் அமைச்சு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று அறியமுடிகின்றது.

இப்போது 2 மணித்தியால மின் வெட்டு நடைமுறையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.