ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்! – நிபோஜன் மறைவுக்குச் சிறீதரன் இரங்கல்

“கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த எஸ்.என். நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கின்றது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மிகச்சொற்ப வயதில், தன்முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாகத் தன்னைத்தானே தகவமைத்துக்கொண்ட நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை.

ஓரிரு மணிநேரங்களின் முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கின்றது.

அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந்தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட நிபோஜனின் ஆத்மா அமைதி பெறட்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.