பிக்பாஷ் லீக் – 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ்.

பெர்த்: ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரின் 12வது சீசன் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.

இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. மெக்ஸ்வீனி 41 ரன்னும், ஹேஸ்ல்லெட் 34 ரன்னும் அடித்தனர். பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் பெர்த் அணி களமிறங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் பெர்த் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அத்துடன் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

கேப்டன் ஆஷ்டன் டர்னர் 53 ரன்கள் அடித்தார். இறுதியில் நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களும், கூப்பர் கன்னோலி 11 பந்தில் 25 ரன்னும் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினர். ஆட்ட நாயகன் விருது ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.