நவஜீவன்ஸ் விக வெற்றி பெற்றது

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY) விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது’

நேற்று (வெள்ளிக்கிழமை) கழக மைதானத்தில் இடம் பெற்ற ஏ பிரிவினருக்கான முதலாவது ஆட்டத்தில் அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

மூன்று செற்களைக் கொண்டதாக இடம் பெற்ற இந்த ஆட்டத்தில்
முதல் சுற்றில் உடுப்பிட்டி நவஜீவன் ஸ் அணி 25:21 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்து
இரண்டாவது சுற்றிலும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ்விளையாட்டுக்கழகம் 25:23 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது

ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற செற் கணக்கில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ்
விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.