நானும் நண்பன் தான்- நானும் நண்பன் தான்- இம்ரான் கான்

சவுதி அரேபியா எப்பொழுதும் பாக்கிஸ்தானின் நண்பன் தான் என்று  பத்திரிக்கையாளர்களிடம் பாக்கிஸ்தான் பிரதமர் திரு.இம்ரான் கான் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில்  பத்திரிகை நிருபர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.

”காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி.,) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே” என்பதே அக்கேள்வி..

அதற்கு பதிலளித்த திரு.இம்ரான் கான் ”ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆயினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்,” என்றார்..

பல்வேறு விஷயங்களில் சௌதி அரேபியா பாக்கிஸ்தானை புறகணிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. காஷ்மீர் விவகாரம் உட்பட.

Leave A Reply

Your email address will not be published.