மகளிர் டி20 உலக கோப்பை – அயர்லாந்தை போராடி வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 61 ரன்கள் எடுத்தார். கேபி லெவிஸ் 38 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேத்யூஸ் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.