மக்கள் விடுதலை முன்னணியின் அஜித் கமகேவினது உடல்நிலையும் கவலைக்கிடம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மக்கள் விடுதலை முன்னணியினரால் அழைப்பு விடுக்கப்பட்ட அரச எதிர்ப்புப் போராட்டத்தில், கண்ணீர் புகை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கெஸ்பேவ பகுதியை சேர்ந்த அஜித் கமகே (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை தற்போது ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவரில், ஒருவரான நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் அமரசிறி (60) ஏற்கனவே  உயிரிழந்தார்.

நிமல் அமரசிறி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான  நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கு நிமல் அமரசிறி , மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் இன்று (01) நிவித்திகலடேயில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.