தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம்.

கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி: தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஆண்டிலே ஸ்டுக்வேப்ஸ், பெஹ்லுக்வே, லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.

3-வது ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி: தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வைடன் மில்லர், டேவிட் மில்லர், , லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்.

3 டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.