ஹோல்டர் பொறுப்பான ஆட்டம் – வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்கள்.

தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜார்ஜி 85 ரன்னில் அவுட்டானார். டீன் எல்கர் 42 ரன் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹோல்டர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹோல்டர் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்டு 3 விக்கெட்டும், ரபாடா, ஹார்மர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 4 ரன் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.